College Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; தனிமையில் சந்தித்து உல்லாசம்.. கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பம்..!

ஈரோட்டில் வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த கல்லூரி மாணவி, தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து 3 மாத கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; தனிமையில் சந்தித்து உல்லாசம்.. கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பம்..!
Pregnant | Instagram Logo File Pic (Photo Credit: Pixabay | Wikipedia)

ஜூலை 03, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், லக்காபுரம் பகுதியில் வாசித்து வரும் வியாபாரியின் 21 வயது நிரம்பிய மகள், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு பி.காம் பயின்று வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, புதுக்கோட்டையை சேர்ந்த முகமது ஹர்ஷத் (வயது 23) என்ற வாலிபருடன் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இது காதலாக மாறியது. Girl Dies After Noodles Get Stuck In Her Throat: தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி சிறுமி பரிதாப பலி; பெற்றோர் பரிதவிப்பு..!

இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து, தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால், மாணவி 3 மாத (Pregnant) கர்ப்பமானார். இதன் பின்னர் மாணவி பயந்து, தயங்கியபடி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக புதுக்கோட்டைக்கு சென்று முகமது ஹர்ஷத் மற்றும் அவரது பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு ஹர்ஷத்தின் பெற்றோர் வாக்குறுதி அளித்தனர். இதன் காரணமாக மாணவியின் பெற்றோர் வீடு திரும்பினர்.

இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல அவர்கள் சொன்னபடி திருமண ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், பல காரணங்களை சொல்லி நாட்களை கடத்தி வந்துள்ளனர். இதனால், மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட முகமது ஹர்ஷத், அவரது தந்தை வக்கீம் சல்மான், தாய் பீவிஜான், சித்தப்பா கபூர் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள புதுக்கோட்டைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் 4 பெரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).