Murder For A Friend: "நண்பனின் தற்கொலைக்கு காரணம் நீதாண்டா" உயிர் நண்பனுக்காக நடந்த கொடூர கொலை: தென்காசியில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்.!
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 17, தென்காசி (Tenkasi): தென்காசி மாவட்டம் கம்பிளி ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் மது குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ், ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு ஊருக்கு அருகே உள்ள காட்டெருக்கள் சென்றுள்ளார். அங்கு சுரேஷ், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மூவரும் மது அருந்தி உள்ளனர். போதையில் மூவர் இடையிலும் சண்டை ஏற்பட்டுள்ளது. Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்... பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்.. 22 பேர் காயம்..!
உயிர் நண்பனுக்காக நடந்த கொடூர கொலை: அதேநேரம் இவர்களுக்கு மற்றொரு நண்பர் சிவா இருந்துள்ளார். ஆனால் காதல் தோல்வியின் காரணமாக சிவா ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்ய ஊக்குவித்தது ராஜ்குமார் தான் என்று கூறி சுரேஷ் மற்றும் பன்னீர்செல்வம், ராஜ்குமாரை அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த ஆய்க்குடி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான சுரேஷ் மற்றும் சிவாவை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

