![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/Alanganallur-Jallikattu-380x214.jpg)
ஜனவரி 17, மதுரை (Madurai): பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். Singer KS Chithra Video: அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்... பாடகி சித்ரா வீடியோ..!
அவனியாபுர ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெற்றது. மொத்தமாக 825 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அதிக காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி பரிசுக்கோப்பை மற்றும் காரை வென்றார். அதுமட்டுமின்றி ஜீர் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் கார் பரிசாக கொடுக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு: தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். இந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். தொடர்ந்து சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் காரும், இரண்டாம் இடம் பிடித்த தமிழரசனுக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளை வெற்றி பெற்றுள்ளது. Tamil Fisherman Arrest: ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: சிறையில் அடைப்பு.!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alanganallur) காலை 7 மணிக்கு தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 1200 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 700 மாடுபிடிவீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியை நேரில் காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பார்வையாளர்களும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் மதியம் 1 மணி நிலவரப்படி, 22 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
#WATCH | Tamil Nadu: World-renowned Alanganallur Jallikattu festival begins in Madurai pic.twitter.com/3dNnTtlf2c
— ANI (@ANI) January 17, 2024