Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. நடைபயிற்சியில் ஈடுபட்ட தந்தை, மகள் பலி..!

மதுரையில் கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. நடைபயிற்சியில் ஈடுபட்ட தந்தை, மகள் பலி..!
Road Accident (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 07, திருமங்கலம் (Madurai News): மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமது ஷா புரத்தைச் சேர்ந்த தம்பதி துளசி நாதன்-விஜயலட்சுமி. துளசிநாதன் செல்போன் கோபுர பராமரிப்பு வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு சஷ்டிகா (வயது 6) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 07) காலை துளசி நாதன் தனது மகள் சஷ்டிகா உடன் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரி குளம் விளக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி (Walking) செய்துகொண்டிருந்தார். Teenagers Arrested: சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர்கள்.. போக்சோவில் கைது..!

அப்போது, சென்னையில் இருந்து நாகர்கோவில் (Chennai To Nagercoil) நோக்கிச் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை (Road Accident) இழந்து நான்கு வழிச்சாலையில் இருந்த தடுப்பை தாண்டி சர்வீஸ் ரோட்டில் நடைபயணம் மேற்கொண்டிருந்த தந்தை, மகள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த குழந்தை சஷ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் துளசிநாதனை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல்துறையினர், சஷ்டிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துளசிநாதன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).