செப்டம்பர் 07, திருப்பூர் (Tirupur News): கேரளா மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் (Minor Girls Missing) கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணவில்லை. இதுகுறித்து, சிறுமிகளின் பெற்றோர் தொடுபுழா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அகிலேஷ் அனில்குமார் (வயது 21), அதுல் ஜோமி (வயது 19) என்ற வாலிபர்கள் ஆசை வார்த்தை கூறி அந்த 2 சிறுமிகளையும் அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், சிறுமிகள் இருவரும் திருப்பூர் திமுருகன்பூண்டியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. Kanchipuram: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்லும் மக்கள்.!
இதனையடுத்து, தொடுபுழா காவல்துறையினர் அங்கு சென்று அந்த சிறுமிகளையும், அந்த வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில், வாலிபர்கள் 2 பேரும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று சென்னை, பழனி ஆகிய ஊர்களுக்கு சென்று விடுதிகளில் தங்கி உள்ளனர். கையிலிருந்த பணம் முழுவதும் செலவானவுடன் சிறுமிகளுடன் திருப்பூருக்கு வந்து, நண்பர்களின் உதவியோடு திருப்பூர் திருமுருகன்பூண்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
மேலும், அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், 2 சிறுமிகளையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.