Woman Killed Inside Meenakshi Mission Hospital: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூதாட்டி வெட்டிக் கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்..!

மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Meenakshi Mission Hospital Logo | Murder File Pic (Photo Credit: Facebook | Pixabay)

ஜூலை 12, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் (Meenakshi Mission Hospital) சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு முத்துலட்சுமி (வயது 70) என்ற மூதாட்டி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். Actress Aparna Died: பிரபல கன்னட நடிகை மரணம்; சோகத்தில் ரசிகர்கள்.!

இந்நிலையில், நேற்று இரவு அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை படுகொலை (Murder) செய்துவிட்டு, மூதாட்டியின் காதில் அணிந்திருந்த தங்கக்கம்மலை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, நகைக்காக மூதாட்டி மருத்துவமனையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement