Female Police Suicide: கணவன்-மனைவி இடையே தகராறு; பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை..!
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக, காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 01, சென்னை (Chennai News): சென்னை, ராயபுரம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் காவலராக பிரியங்கா (வயது 27) என்பவர் பணிபுரிந்து வந்தார். அதே, காவல்நிலையத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 30) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். HBD R Madhavan: அலைபாயுதே நாயகன் நடிகர் ஆர். மாதவனுக்கு இன்று பிறந்தநாள்; குவியும் வாழ்த்துக்கள்..!
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி அன்று, இவர்கள் இருவரும் காதல் திருமணம் (Love Marriage) செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்கள், ராயபுரம் தம்புலைன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல நேற்றைய தினமும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதன்காரணமாக, மிகுந்த மன வேதனையில் இருந்த பிரியங்கா, திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சேகர், தனது காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த ராயபுரம் உதவி கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர், உயிரிழந்த பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சேகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன 4 மாதத்திலேயே பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

