![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1717214559R%2520Madhavan%2520Birthday%2520%2528Photo%2520Credit%2520LatestLY%2529-380x214.jpeg)
ஜூன் 01, சென்னை (Cinema News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூரில், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தமிழ் தம்பதி ரங்கநாதன் - சரோஜா ஆகியோருக்கு, ஜூன் 01ம் தேதி மகனாக பிறந்த மாதவன் (Ranganathan Madhavan), தனது இளமை கால கல்வி மற்றும் கல்லூரி படிப்புகளை அங்கேயே நிறைவு செய்தார். தேசத்தின் மீது பக்தி கொண்ட மாதவன் (R Madhavan), என்சிசி-யில் சேர்ந்து சிறந்து விளங்கியதன் பேரில் இங்கிலாந்து சென்று பயிற்சி பெரும் வாய்ப்பையும் பெற்றார். பின் தாயகம் திரும்பியவர் இராணுவம் அல்லது விமானப்படையில் இணையலாம் என முடிவெடுத்து அதற்கான முயற்சியை மேற்கொண்டபோது, வயது காரணமாக அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.
மாதவன் திரைவரலாறு சுருக்கம்: இதனையடுத்து, கடந்த 1993ல் ஹிந்தியில் ஒளிபரப்பான ஏலே லவ் ஸ்டோரி நெடுந்தொடரில் அறிமுகமானவர், 1999ம் ஆண்டு தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் சிகரமாக அறியப்பட்ட மணி ரத்னத்துடன் கைகோர்த்து அலைபாயுதே படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான பின்னர் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, அவரை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வித்திட்டது. இதற்குப்பின் என்னவளே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், லேசா லேசா, ஜே ஜே, தம்பி, குரு, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ராக்கிட்டரி: நம்பி விளைவு உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். Harbhajan Singh Casts his Vote: "உங்களுக்காக உழைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் பேட்டி.!
விருதுகளின் விபரம்: சமீபத்தில் அஜய் தேவ்கான், ஜோதிகா ஆகியோர் நடித்து வெளியான சைத்தான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் மாதவன் திரைப்பட நடிகராக மட்டுமல்லாது எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் ஆவார். அதேபோல, பிலிம்பேர் விருது, தென்னிந்திய சிறந்த திரைப்பட நடிகர் விருது, தமிழ்நாடு மாநில விருது, சைமா விருது, இட்பா விருது, நார்வே திரைப்பட விருது, தேசிய அளவிலான திரைப்பட விருது என பல விருதுகளை குவித்து இருக்கிறார். இவரின் நடிப்பில் இந்த ஆண்டு 2 ஹிந்தி மற்றும் 2 தமிழ் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
திரையில் மாதவன், நீச்சல் போட்டியில் மகன்: தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகின் நாயகன், 90களில் பல மங்கைகளின் மனதை கவர்ந்த சாக்லேட் பாய் என வருணிக்கப்பட்ட மாதவன் ஜூன் 01 ம் தேதியான இன்று 1970 அன்று பிறந்தார். அவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. கடந்த 1999ம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்து, தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற மகனும் இருக்கிறார். இவர் சிறந்த நீச்சல் வீரர் ஆவார். இந்திய அளவில் நடைபெற்ற 48 வது ஜூனியர் நேஷனல் அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்று 4 தங்கம் & 3 வெள்ளி பதக்கத்தை வென்றார். 1500 மீட்டர் அளவிலான நீச்சல் போட்டியில் இந்திய வரலாற்று சாதனையை 16:01.73 என்ற கணக்கில் முறியடித்து புதிய சாதனை படைத்தார். மலேஷியாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்காக 5 தங்கபதக்கத்தை வென்றார்.
திரைபிரபலங்கள் & ரசிகர்கள் என பலரும் மாதவனுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை சொல்லலாமே...
Happy birthday #madhavan...#Maddy pic.twitter.com/fBasVjspsV
— Paritush P Choudhury🇮🇳 (@paritush_assam) June 1, 2024
ரசிகரின் பதிவு:
Happy Birthday Madhavan... Another favourite Scenes, itha song Loop modela College Days Katutu irukan.. pic.twitter.com/edF6jssB2M
— Manivannan (@Manivan13543490) May 31, 2024
சில படங்களில் இருந்து ரசிக்கக்கூடிய காட்சிகள்:
Maddy, Maddy! Oh Oh, Maddy! 🤩
Wishing the ever-charming Madhavan, a very happy birthday! 🥳
Watch his extensive collection of films now on Simply South worldwide, excluding India.#HBDMadhavan | @ActorMadhavan ❤️ pic.twitter.com/jqvY48bfXC
— Simply South (@SimplySouthApp) June 1, 2023