Pregnant Woman Dies By Suicide: 4 மாத கர்ப்பிணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!

விருதுநகரில் 4 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman Dies By Suicide: 4 மாத கர்ப்பிணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 11, ராஜபாளையம் (Virudhunagar News): தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி கணேசன்-மீனா. இவர்களது 2-வது மகள் நந்தினி (வயது 21), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். CSG Vs ITT Highlights: திருப்பூர் அணியை வீழ்த்தி அசத்தல்; சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி..!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். பின்னர், தகவல் அறிந்துகொண்ட பெற்றோர் இவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியில் இவர்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் குருநாதனின் தாயாரும் வசித்துள்ளார். தற்போது, நந்தினி 4 மாத கர்ப்பிணியாக (Pregnant Woman) இருந்துள்ளார். அவரை, அவரது மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த நந்தினி, தனது தாயாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். பின்னர், இதுதொடர்பாக நந்தினியின் தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில், ராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தினி உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறேதும் காரணம் உண்டா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).