ஜூலை 11, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) டி20 கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (CSG Vs ITT) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி சார்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். PM Modi Austria Visit: 2047க்குள் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.!
இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் தங்களது விக்கெட்டைகளை அடுத்தடுத்து பறிகொடுத்து செல்ல, மறுபுறம் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். சேப்பாக் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்டநாயகன் விருதை ப்ரதோஷ் ரஞ்சன் பெற்று சென்றார்.
What a catch from @mohamed.__.ali_ #TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethu pic.twitter.com/HMRlne8Q3x
— TNPL (@TNPremierLeague) July 10, 2024