ஏப்ரல் 17, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி சண்முகசுந்தரம்-ராமலட்சுமி (வயது 40). இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சண்முகசுந்தரம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராமலட்சுமி திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். Peanut Bonda Recipe: வேர்க்கடலை போண்டா செய்வது எப்படி..? -விவரம் உள்ளே..!

இந்நிலையில், பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள கோட்டூரில், ராமலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலை வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 3 மர்ம நபர்கள் (Hang Of Robbers) வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த பார்த்த ராமலட்சுமி அதிர்ச்சியடைந்து, சத்தமிட்டு கத்தியுள்ளார். முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் ராமலட்சுமியை மிரட்டி, வாய் மற்றும் கைகளை கயிற்றை கொண்டு கட்டி வைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிவிட்டு, உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.