ஏப்ரல் 16, சென்னை (Kitchen Tips): சத்தான வேர்க்கடலை போண்டாவை ருசியாக, கடலை மாவு சேர்க்காமல் வேர்க்கடலை மட்டுமே பயன்படுத்தி சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை - 2 கப்
முந்திரி பருப்பு - 1 கப்
பால் - 2 கப்
பிரட் துண்டுகள் - 4 கப்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் (பொரிப்பதற்கு) - 800 கிராம்
பச்சை மிளகாய் - 8
கொத்தமல்லித் தழை, கறிவேப்பில்லை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!
செய்முறை:
முதலில் வேர்க்கடலை, முந்திரிபருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். பிரட் துண்டுகளை உதிர்த்து, அதில் பால் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு தேவையான உப்பை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, அதில் நாம் செய்து வைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக உருட்டி அதனை எண்ணெயில் போடவும். நன்கு சிவந்து மொறுமொறுப்பாக வந்ததும், அதனை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும். பின்னர், சுவையான வேர்க்கடலை போண்டா ரெடி.