Worker Was Sentenced To Life Imprisonment: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!
கோயம்புத்தூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலை 16, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் (வயது 54). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி, வீட்டிற்கு அழைத்துச்சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..!
இதுகுறித்து சிறுமி தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். அவர், குழந்தைகள் நல அமைப்புக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். பின்னர், குழந்தைகள் நல அமைப்பினர் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், செல்வராஜ் மீது போக்சோ (Pocso Act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோயம்புத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதற்கான தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி செல்வராஜுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

