மார்ச் 06, புதுடெல்லி (New Delhi): பங்குச்சந்தையில் இந்த வாரம் பாசிட்டிவ்வான வாரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்த்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டு சந்தை அளவுகோலான சென்செக்ஸ் (Sensex), புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. முதல் முறையாக 74,000 ஐத் தாண்டியுள்ளது. Carrot Payasam Recipe: கேரட் பாயசம்.. சுவையாக செய்வது எப்படி?.!
இன்று நிஃப்டி (Nifty) 50 புள்ளிகள் அல்லது 0.53 சதவீதம் அதிகரித்து 22,474.05 ஆகவும், சென்செக்ஸ் 409 புள்ளிகள் அல்லது 0.55 சதவீதம் அதிகரித்து 74,085.99 ஆகவும் முடிவடைந்தது. இருப்பினும், மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க விற்பனை அழுத்தத்தைக் கண்டன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு (BSE Midcap index ) 2 சதவீதத்திற்கும், இன்ட்ராடே வர்த்தகத்தில் ஸ்மால்கேப் குறியீடு (Smallcap index) கிட்டத்தட்ட 3 சதவீதத்திற்கும் சரிந்தது. இறுதியில், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.65 சதவீதம் இழப்புடன் முடிந்தது, ஸ்மால்கேப் குறியீடு 1.91 சதவீதம் சரிந்தது.