Car Accident: சிறுவன் ஓட்டிய கார்.. தொழிலாளி மீது மோதி பரிதாப பலி.. பற்றி எரிந்த கார்..!
கோவை பீளமேட்டில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார்.
ஜூலை 19, கோவை (Coimbatore News): மேற்கு வங்க மாநிலம் ஜார் கிராம் நகரை சேர்ந்தவர் அக்சய் போரா (23). இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பீளமேடு காவல் நிலையம் அருகே மேம்பால தூண் பகுதியில் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. அதில் அக்சய் போரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். Special Bus Service in TN: வார இறுதி, ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு.!
மேலும் தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காரில் இருந்த 17 வயது சிறுவன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். இத்தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளி உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவர்க்கு வாகனம் ஓட்டகொடுத்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
A luxury sedan driven by a Plus Two student aged 17 claimed the life of a construction worker at Peelamedu in #Coimbatore early on Wednesday. The car caught fire after ramming the median and the student, who got trapped inside the car, was rescued by other workers. @THChennai pic.twitter.com/xcDgIc1nlq
— Wilson Thomas (@wilson__thomas) July 18, 2024
(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

