ஜூலை 19, கிளாம்பாக்கம் (Chennai News): தலைநகர் சென்னையில் தங்கியிருந்து பணியாற்றி வருவோர், வார இறுதியான வெள்ளி, சனிக்கிழமைகளில் தங்களின் சொந்த ஊருக்கு சென்று, பின் மீண்டும் அங்கிருந்து சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் சென்னை திரும்புவது உண்டு. தொலைதூர பயணிகளின் தங்களின் விரைவு மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. TN Weather Update: 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
அந்த வகையில், ஆடி பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சென்னையில் உள்ள கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 220 சிறப்பு பேருந்துகளும்,, நாளை 585 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கும் பேருந்துகள்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் 45 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 50 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று மற்றும் நாளை தலா 15 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயணிகளின் வருகைக்கேற்ப மண்டல வாரிய கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.