Rowdy Baby Surya: மீண்டும் சர்ச்சை செயலை தொடங்கிய ரௌடி பேபி சூர்யா; மதுரையில் பரபரப்பு புகார்.!

சமூக வலைத்தளத்தில் தமிழகத்தை பொறுத்தமட்டில் சர்ச்சைக்குரிய நபராக வலம்வரும் ரௌடி பேபி சூர்யாவின் மீது மதுரையில் பெண்மணி புகார் அளித்துள்ளார். இதனால் அவர் மீண்டும் சிறை செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rowdy Baby Surya: மீண்டும் சர்ச்சை செயலை தொடங்கிய ரௌடி பேபி சூர்யா; மதுரையில் பரபரப்பு புகார்.!
Chitra | Rowdy Baby Surya (Photo Credit: Facebook / YouTube)

ஆகஸ்ட் 24, மதுரை (Madurai News): இந்தியாவில் டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருந்தபோது, அதனை வைத்து தமிழகத்தில் பிரபலமான பல நபர்களில் கவனிக்கும்படியாக இருந்தவர் ரௌடி பேபி சூர்யா. இவர் மலேஷியாவில் கணவருடன் வசித்து வந்த நிலையில், டிக் டாக் மோகத்திற்கு பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, சூர்யா தனது கணவரை பிரிந்து தற்போது மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்பவருடன் வருகிறார்.

தொடக்கத்தில் கவர்ச்சியான நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வந்த சூர்யா, பின்னாளில் ஆபாசமான வார்த்தைகளையும் சேர்த்துக்கொண்டார். இதற்கு காரணமாக தன்னை ஆபாசமாக கமென்டில் திட்டும் நபர்களுக்கு பதில் தெரிவிக்க, அவர்களின் பாணியில் பேசுவதாகவும் தெரிவித்தார். இவரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லையை மீறி சென்றது.

ஆபாசமாக பேசி வீடியோ பதிவிடுவது, தனது ஆண் தோழருடன் நடனம், தன்னை எதிர்க்கும் பிற யூடியூபர்களுக்கு பகிரங்க மிரட்டல் என பல வகையான சர்ச்சைகளை செய்து வந்தார். இறுதியாக கோவையை சேர்ந்த பெண்மணியை மிரட்டியதாக புகார் பெறப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது ரௌடி பேபி சூர்யா ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளார். Aditya L1 Update: சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா; களமிறங்கப்போகும் இஸ்ரோ – பிரதமர் மோடி உறுதி.!

இந்நிலையில், மதுரையை சேர்ந்த சித்ரா என்ற பெண்மணி சமீபத்தில் ரௌடி பேபி சூர்யா, சிக்கந்தர், திவ்யா கள்ளச்சி, சாதனா ஆகியோருக்கு எதிரான வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இவர் குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் தொண்டு நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரின் வீடியோவால் ஆத்திரமடைந்த சூர்யா, அந்த பெண்மணிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

அவருக்கு போனில் தொடர்பு கொண்டு ஆபாச அர்ச்சனை செய்யும் சூர்யா, அவரின் மகளது புகைப்படத்தை மாபிங் செய்து வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால் சூர்யாவின் யூடியூப் பக்கத்தை முடக்க வேண்டும். இவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்மணி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).