Chandrayaan 3 | PM Narendra Modi (Photo Credit: Twitter / Facebook)

ஆகஸ்ட் 23, புதுடெல்லி (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் (ISRO), கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் சந்திராயன் 3 (Chandrayaan 3) செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேல் புவியின் சுற்றுவட்டப்பாதை, நிலவின் சுற்றுவட்டப்பாதையை கடந்த சந்திராயன் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ தலைவர் மயில்சாமி (Mayilsamy), திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் (Veera Muthuvel) வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), பிரிக்ஸ் 2023 (BRICS Summit 2023) மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோக்கன்ஸ்பர்க் நகருக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்தவாறு நேரலையில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். பிரதமரின் முகம் இன்முகத்துடன் இருந்தது. IND Vs IRE T20I: மழையினால் தடைபட்ட இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டம்; இந்தியா அணி மாபெரும் வெற்றி.!

அதனைத்தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை (ISRO Scientists) பாராட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அடுத்தபடியாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்-1 (Aditya L 1) வெற்றியடைய வாழ்த்தினார். அதற்கான முயற்சிகளை தொடங்கவும்" அறிவுறுத்தினார்.

"இந்தியாவின் (India) திறமைக்கு வானில் எல்லைகள் இல்லை என்பதை மீண்டும் இந்தியா நிரூபணம் செய்துவிட்டது. நாம் நமது சூரிய குடும்பத்தை சோதனை செய்து வருகிறோம். அவை தொடர வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நாம் படைக்க வேண்டும்" எனவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்திய விஞ்ஞானிகள் இதுவரை உலக நாடுகள் யாரும் செல்லாத நிலவின் தென்துருவ பகுதியில் சந்திராயனை களமிறக்கி ஆய்வு மேற்கொள்கிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளில் பல விஷயங்கள் நிலவை பற்றி அறிந்துகொள்ள உதவும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.