ஜூன் 20, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G Smart Phone) ஸ்மார்ட்போனை வருகின்ற ஜூன் 24-ஆம் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட முன்னோட்ட காட்சிகள் மூலம் இந்த போனின் வருகையை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து இதில் பார்ப்போம். Security Forces Vehicle Accident: பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 வீரர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!
சிறப்பம்சங்கள்:
இந்த ஸ்மார்ட்போன் பெரிய அளவிலான, 6.67-அங்குல AMOLED டிஸ்ப்ளேவுடன், மென்மையான 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டு தடைபடாத பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
இதில், 50MP Sony IMX766 பிரைமரி சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பும், 16MP செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன், Qualcomm Snapdragon 695 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன.
இதில் 5,500mAh பேட்டரி திறனுடன், 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகின்றது.
விலை:
இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், "CE" பிராண்டிங்கைக் கருத்தில் கொண்டு, இந்த ஸ்மார்ட்போன் நடுத்தர பிரிவின் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த போன் 'மெகா ப்ளூ' வண்ணத்தில் அறிமுகமாகவுள்ளது. இது சமீபத்திய முன்னோட்ட காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டைலான மற்றும் மாடர்ன் தோற்றமுடைய போனை உணர்த்துகின்றது.