Mother Kills Daughter: 7 வயது மகளை கொலை செய்த கொடூர தாய்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!

கள்ளக்குறிச்சியில் கடன் தொல்லையால் பெற்ற தாயே தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother Kills Daughter: 7 வயது மகளை கொலை செய்த கொடூர தாய்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!
Dead Body (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 12, சங்கராபுரம் (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ்-சத்தியா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் 3-வது குழந்தை அதிசயா (வயது 7), கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக சங்கராபுரம் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். Two Students Drowned In Sea: சிலம்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி..!

இந்நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, தனது தாய் சத்யாவுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், சத்யாவை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் பூட்டை கிராமத்தில் உள்ள பல்வேறு நபர்களிடம் இருந்தும் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். அதனை வருகின்ற அமாவாசை அன்று திருப்பித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி பணத்தை செலுத்த முடியாமல் இருந்த சத்தியா, தனது மகளை கொலை (Murder) செய்துவிட்டால் துக்க நிகழ்வு நடந்த வீட்டில் கடன்காரர்கள் வந்து பணம் கேட்க மாட்டார்கள் என, விவசாயி கிணற்றில் (Well) தள்ளிவிட்டு கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சத்தியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).