ஆகஸ்ட் 12, வேளாங்கண்ணி (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்பம் (Silambam) போட்டி நடைபெற்றது. அதில், கலந்து கொள்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவ, மாணவியர் வந்துள்ளனர். இதனிடையே, வேளாங்கண்ணி கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள், கடலில் குளித்து மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தனர். Tiruvallur Accident: லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி.!
அப்போது, கடல் அலையில் இரண்டு மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சடலமாக (Drowning) கரை ஒதுங்கினர். உயிரிழந்த மாணவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்த மாணவர் ஒருவரும், வீரமலை என்ற மாணவரும் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.