நவம்பர் 22, சென்னை (Chennai News): தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வானிலை (Weather):
இன்று (22-11-2024) முதல் வரும் 24ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், வரும் 25ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Pattabiram TIDEL Park: 6000 ஐடி ஊழியர்களுக்கு வேலைவாப்பு; பட்டாபிராமில் திறக்கப்பட்டது டைடல் பூங்கா.. அசத்தும் முதல்வர்.!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
புயல் முன்னெச்சரிக்கையாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது. மேலும், மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், இன்று திரும்பி வர அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இன்று இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):