Pattabiram Tidel Park (Photo Credit: YouTube)

நவம்பர் 22, பட்டாபிராம் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் (Pattabiram Tidel Park) பகுதியில், ரூபாய் 330 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்கா (Tidel Park) இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. பட்டாபிராம் பகுதியில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 21 தளங்களுடன், 5.57 லட்சம் சதுர அடி பரப்பில் டைட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Baby Delivery: வாட்ஸப்பில் குழு வைத்து வீட்டிலேயே பிரசவம்; விபரீதம் வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.! 

நவீன வசதிகள்:

நவீன வசதிகளுடன் கூடிய அமைப்புகளுடன், பாதுகாப்பு, சுகாதாரம், உடற்பயிற்சி கூடம் உட்பட பல வசதிகளை உட்கட்டமைப்பாக கொண்டு, 6000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றும் வகையில் பட்டாபிராம் டைட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் படித்த இளைஞர்கள், மாநில அளவில் இருக்கும் படித்த இளைஞர்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.

Pattabiram Tidel Park Inaguration by CM MK Stalin (Photo Credit: @MKStalin X / @TidelPark X)

6 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பு:

மேலும், 20 தளங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள உள்ளன. இதன் வாயிலாக சுமார் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதேபோல, பட்டாபிராம் பகுதியின் வளர்ச்சியும் அதிகரிக்கப்படவுள்ளது.

பட்டாபிராம் டைடல் பூங்கா திறக்கப்பட்டது: