ஜூன் 28, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (Pune-Bengaluru NH) நிகழ்ந்துள்ளது. குண்டேனஹள்ளி கிராஸ் அருகே அதிகாலை 4 மணியளவில், அதிவேகமாக வந்த மினி பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கி பலியானவர்களை மீட்டனர். After Jio, Airtel Also Hikes Prices: ஜியோவைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், இரண்டு குழந்தைகள் உட்பட உயிரிழந்த 13 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் புனித யாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது. மேலும், விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.