Sexual Harassment Of Schoolgirls: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..!

அரியலூரில் கராத்தே கற்றுத் தருவதாக சொல்லி, பல மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Sexual Harassment Of Schoolgirls: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..!
Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கர்ணன் (வயது 36) பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுப்பதாக சொல்லி, சுமார் 20-க்கும் அதிகமான மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் (Sexual Harassment Of Many Female Students) ஈடுபட்டுள்ளார். Engineering Student Suicide In College Hostel: பொறியியல் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை..!

இதுதொடர்பாக, மாணவி ஒருவர் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, கடந்த 24-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், பள்ளிக்கு விரைந்து வந்த குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வீரமணி புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட கர்ணன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கர்ணன், நேற்று செந்துறை பிரிவு சாலை அருகே செல்லும்போது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 07:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).