Engineering Student Suicide In College Hostel: பொறியியல் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை..!
திருநெல்வேலி தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏப்ரல் 02, நெல்லை (Tirunelveli News): தென்காசியில் உள்ள பண்பொழியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் நாகலட்சுமி (வயது 18). இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்துள்ளார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். Elaneer Sarbath: கோடை வெயிலுக்கு ஏற்ற இளநீர் சர்பத் செய்வது எப்படி..?
இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide In Hostel Room) செய்துகொண்டு பிணமாக தொங்கிய நிலையில் உள்ளார். இன்று காலை தூங்கி எழுந்து இதனை பார்த்த சக தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கல்லூரி விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, பாளை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்த காவல்துறையினர் மாணவி நாகலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சமீபத்தில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் நாகலட்சுமி ஒரு சில பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை என தெரியவந்துள்ளது. இதன்காரணமாக, அவர் தனிமையில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறேனும் காரணம் உள்ளனவா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

