POCSO Case Against Teenager: 15 வயது சிறுமிக்கு தாலிகட்டிய வீடியோ வைரல்.. வாலிபர் மீது போக்சோ வழக்கு..!
திருப்பத்தூரில் 15 வயது சிறுமிக்கு 22 வயது வாலிபர் தாலிகட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, வாணியம்பாடி (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 16) வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. Student Dies By Suicide: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி.. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
அதில், காணாமல் போன சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 22) என்ற இளைஞர் ஒருவர் தாலி கட்டுவது போல் காட்சிகள் இருந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில், இளைஞர் சிறுமியை திருமணம் (Child Marriage) செய்துள்ளது தெரியவந்தது. இதனிடையே, சிறுமி மற்றும் வாலிபர் ஆகிய இருவரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

