Hanging Suicide | NEET File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, பட்டுக்கோட்டை (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார்-சாந்தி. இவர்களது மகன் தனுஷ் (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மருத்துவராகும் கனவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கு படிக்க பிடிக்காததால் ஒரு மாதத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு (NEET Exam) எழுதியுள்ளார். Thanjavur Accident: ஸ்டியரிங் லாக் ஆனதால் சோகம்; சாலையில் நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் காட்சிகள்.!

இதில், அவர் தேர்ச்சி பெறாததால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து, மாணவரின் பெற்றோர் மீண்டும் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் மகனை சேர்ப்பதாக இருந்து வந்துள்ளனர். இரண்டு முறை தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததாலும், பொறியியல் படிப்பு பிடிக்காததாலும் தனுஷ் கடுமையான விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 16) தனுஷின் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த தனுஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியாக சென்ற தனுஷின் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தனுஷின் உடலை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கூலி வேலைக்கு சென்ற தனுஷின் பெற்றோர், மகன் இறந்த தகவல் அறிந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மதுக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.