Speeding Bus Collided with Eicher Lorry (Photo Credit: @mannar_mannan X)

ஜூலை 13, காரமடை (Coimbatore News): தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், அதிவேகத்தில் பயணம் செய்து விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், அவர்களின் போட்டித்தன்மை காரணமாக அத்ஹிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.

தறிகெட்டு இயங்கிய பேருந்தால் சோகம்:

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நோக்கி, தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் பயணம் செய்தது. இந்த பேருந்து கோவை - மேட்டுப்பாளையம் (Coimbatore Mettupalayam Road) சாலையில் உள்ள காரமடை, ரவிராம் திருமண மண்டபத்திற்கு அருகேயுள்ள பகுதியில் சாலையோரம் நின்ற இருசக்கர வாகன (Speeding Bus Crash with Lorry in Karamadai) ஓட்டி, முட்டை பாரம் ஏற்றிவந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. Alekan Falls: அருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகளின் உடைகளை தூக்கி வந்து அலறவிட்ட காவல்துறை; காரணம் என்ன?.! 

ஒருவர் பரிதாப பலி., மற்றொருவர் படுகாயம்:

அதிவேகத்தில் பயணித்த எம்.எஸ்.எம் தனியார் பேருந்து, சாலையோரம் நின்ற இருசக்கர வாகன ஓட்டி மீது மோதியது. அதிவேகத்தில், முட்டை ஏற்ற காத்திருந்த ஈச்சர் ரக லாரியின் மீதும் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி, வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும், லாரியில் முட்டை ஏற்ற காத்திருந்த முட்டைக்கடை பணியாளர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்து ஓட்டுநர் கைது:

தகவல் அறிந்து வந்த காரமடை காவல் துறையினர், விபத்தில் பலியான முட்டைக்கடை ஊழியரான ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (52) என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி, புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபால் (29) என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பேருந்தின் ஓட்டுநர் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

பதறவைக்கும் காட்சிகள்: