School Girl Suicide: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – பள்ளி மாணவியின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!

அடிக்கடி தூக்குப்போடுவதாக கனவு வருவதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

School Girl Suicide: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – பள்ளி மாணவியின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!
Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 18, சென்னை (Chennai News): சென்னை மயிலாப்பூரில் முத்து நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சுரேஷ்குமாரை பிரிந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. அதன்பின் நாகலட்சுமி அவருடைய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும், இவர் வீட்டிலேயே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக வகுப்பு நடத்திக் கொண்டு வருகிறார். Minor Girl Murder: பள்ளி மாணவி கொலை – காதலை கைவிட மறுப்பு தெரிவித்ததால் பெற்றோரால் அடித்துக்கொலை..!

இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜனனி (வயது 17) மயிலாப்பூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, ஜனனி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர் ஜனனியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணையில் மாணவியின் அறையை சோதனை செய்து பார்த்த போது, ஜனனி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அதில், “இரவில் நான் தூங்கும் போது அடிக்கடி தூக்குப்போடுவது போன்று எனக்கு கனவு வருகிறது. இதனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. எனவே, நான் 3 படத்தை போல தற்கொலை செய்துகொள்ள போகிறேன். எனது அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களை பிரிவது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது” எனவும் அதில் அவர் எழுதியுள்ளார்.

இதுகுறித்த விசாரணையின் பேரில், மாணவியின் தற்கொலைக்கு மேற்கொண்டு எதுவும் காரணம் உள்ளதா எனவும் வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).