Minor Girl Murder: பள்ளி மாணவி கொலை – காதலை கைவிட மறுப்பு தெரிவித்ததால் பெற்றோரால் அடித்துக்கொலை..!
பள்ளி மாணவியை பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா என மூன்று பேரும் கொலை செய்து ஏரியில் வீசி சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
மார்ச் 18, ஒசூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் பட்டவாரப்பள்ளி பகுதியில் வசிக்கும் விவசாயி பிரகாஷ் (வயது 50). இவரது மகள் ஸ்பூர்த்தி (வயது 16). இவர் பாகலூர் அரசு பெண்கள் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மேலும், ஒசூர் அருகே உள்ள முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (வயது 25) என இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். Forest Fire: வேகமாக பரவி வரும் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..!
கடந்த 2022-ஆம் ஆண்டு, சிவா மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஒசூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், மாணவிக்கு 18 வயது ஆகாத நிலையில், அவரை கூட்டிச் சென்றதற்காக ஒசூர் காவல்துறையினர் சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், மீண்டும் காதலை இருவரும் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி திடீரென மாணவி காணவில்லை. பின்னர், நேற்று முன்தினம் இரவு தலையில் பலத்த காயமடைந்தவாறு பட்டவாரப்பள்ளி ஏரியில் மாணவி சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற பாகலூர் காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் துணி போட்டு மூடியுள்ளது தெரியவந்தது. மேலும், மாணவியின் பெற்றோர் பிரகாஷ்-காமாட்சி மற்றும் மாணவியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் விசாரித்ததில், இவ்வாறு, எங்களது மகளை அவனிடம் இருந்து விலக வற்புறுத்தினோம். ஆனால், நாங்கள் சொல்வதை கேட்காமல் அவனுடன் சுற்றித் திரிந்தார். அதனால் அவரை கட்டில் கம்பியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தோம் என பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர். மேலும் தடயங்களை மறைப்பதற்காக, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் வீசி விட்டு வந்தகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் இவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

