12th Board Exam Result: +2 பொதுத் தேர்வில் 600/599 மதிப்பெண்கள்.. மாநில அளவில் முதலிடம்.., சாதனை படைத்த மாணவி..!
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், பழனியை சேர்ந்த மாணவி 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மே 08, பழனி (Dindigul News): தமிழகத்தில் மார்ச் 03ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் (12th Exam Results 2025) மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9 மணியளவில் பள்ளிக்கல்வித்துறையின் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய பக்கத்தில் வெளியானது. +2 Student Dies By Suicide: +2 தேர்வில் தோல்வி பயம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தேர்ச்சி.. குடும்பத்தினர் சோகம்..!
மாணவி முதலிடம்:
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில், மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவிகள் தான் இம்முறையும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி என்பவர், மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவி ஆங்கில பாடத்தை தவிர பிற அனைத்து பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன்படி, 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். முதலிடம் பிடித்த மாணவிக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 08, 2025 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

