Teacher Arrested For Misbehaving With Schoolgirl: பள்ளி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!

திருப்பூரில் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Teacher Arrested For Misbehaving With Schoolgirl: பள்ளி மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!
Women Abuse | Feeling Sad File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 06, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பாளையம்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் பணிபுரியும் கருப்பசாமி (வயது 41) என்ற ஆசிரியர், பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவியை நேற்று முன்தினம் பள்ளியின் மாடிக்கு அழைத்துச் சென்று, மாணவியிடம் தவறாக (Misbehaved With A Student) நடந்து கொண்டுள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவி இதைப்பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். Mango Faluda Icecream: மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..!

இந்நிலையில் நேற்று காலை, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவியின் சித்தி பள்ளிக்குள் சென்று, அந்த ஆசிரியரை அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த அனுப்பர்பாளையம் சரக காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், ஆசிரியர் கருப்பசாமியை மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Apr 06, 2024 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).