
மே 19, தேவகோட்டை (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் (Devakottai) உள்ள ராம்நகர் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் (வயது 47). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை. இவரது மனைவி, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டிற்கு உறவினரின் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கோடை விடுமுறைக்கு வந்துள்ளார். ஆரோக்கியதாஸ், தனது மனைவி இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். படிக்கும் வயதில் பலான வேலை.. பச்சிளம் பிஞ்சை குழிதோண்டி புதைத்த கல்லூரி மாணவி.!
ஆசிரியர் கைது:
இதனையடுத்து, பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடல்நிலையில், கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகளின் உடல்நிலையை கவனித்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, ஆரோக்கியதாஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை கூறியுள்ளார். உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர், தேவகோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3