Pudukkottai College Girl Delivery Case (Photo Credit : Youtube)

மே 18, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவி, இலுப்பூர் அருகே உள்ள விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வந்துள்ளார். இறுதியாண்டு பயின்று வந்த மாணவி, வயலோகம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களில் ஊர் சுற்றி உல்லாசமாக இருந்த நிலையில், காதல் மயக்கத்தில் மாணவி கர்ப்பமானதாக தெரியவருகிறது.

வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்த மாணவி :

தான் கர்ப்பமாக இருப்பதை வீட்டிற்கு தெரியாமல் வெகு மாதங்களாக ரகசியமாக பாதுகாத்து வந்த மாணவி, நிறைமாத கர்ப்பிணியானதால் 10வது மாதத்தில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பின் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்ததால் பயந்த மாணவி, உண்மை வெளிவரக்கூடாது என எண்ணி வீட்டு வாசலில் குழாய் பதிப்பதற்கு தோண்டி மூடப்பட்டிருந்த இடத்தில் அவசர அவசரமாக மேலோட்டமாக குழந்தையை புதைக்க முயன்றுள்ளார். College Girl Sexually Harassed: கல்லூரி மாணவிகள் டார்கெட்? மிரட்டல் கல்யாணம், செக்ஸ் டார்ச்சர்.. திமுக பிரமுகர் மீது அதிர்ச்சி புகார்.! 

குழந்தையை உயிருடன் புதைத்த மாணவி :

குழந்தையை உயிருடன் மண்ணை போட்ட மூட முயன்றதால் வீரிட்டு அழவே, எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டி பதறியடித்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதனால் குழந்தையை முழுமையாக மூடாமல் மாணவி வீட்டுக்குள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மேலோட்டமாக மண்ணை போட்டு மூடப்பட்டிருந்த குழந்தையை வெளியில் எடுத்த மூதாட்டி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவலளித்து அவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

போலீசார் விசாரணை :

இதன் பின் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரித்ததில் உண்மை அம்பலமானது. இதனால் மாணவி மற்றும் குழந்தையை ஒரே வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்த காவல்துறையினர், குழந்தையை கொல்ல முயன்ற மாணவி மீதும், கொலைக்கு தூண்டுதலாக இருந்த காதலன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.