Died file pic (Photo Credit: Pixabay)

ஜூலை 26, வில்லிவாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவை சேர்ந்த தம்பதி கவுஷா பாஷா (வயது 48)-ஷாஜிதா பானு. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷா, கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். School Van Driver Dies: 20 மாணவர்களின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த வேன் ஓட்டுநர்; ரூ.5 இலட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

இந்நிலையில், நேற்றைய தினம் பிரேத பரிசோதனை (Postmortem) அறிக்கை வெளியானது. அதில், கவுஷா பாஷா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மனைவி ஷாஜிதாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பாலியல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும், பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. இதன்காரணமாக சம்பவ நாளன்று கவுஷா பாஷா, இதனை தீவிரமாக கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை (Murder) செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷாஜிதா பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.