Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை; காதலியின் தந்தை கைது..!
திண்டுக்கலில் காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த காதலியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 07, வத்தலக்குண்டு (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (வயது 24). இவர், சென்னை துறைமுகத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 46) என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கபிலன் காதலித்த பெண் அண்ணன் தங்கை உறவுமுறை (Love Affair) என்பதால், இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார். இருப்பினும், கபிலன் தன் காதலை கைவிட மறுத்துள்ளார். TN Weather Update: வங்கக்கடலில் உருவாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டுக்கு மழை எப்படி?.. அறிவிப்பு இதோ.!
இதனையடுத்து, தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும், காதலியின் தந்தை மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரமாரியாக (Murder) வெட்டியுள்ளார். இதனால், படுகாயமடைந்த கபிலனை மீட்டு, விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், விருவீடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 07, 2024 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

