Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 07, சென்னை (Chennai): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையை பொறுத்தமட்டில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவுகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை பொறுத்தமட்டில், நேற்று மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8 மணியளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து எட்டாம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 3 தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்குவங்கம் - வடக்கு ஒரிசா அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும். Financial Planning for Couples: தம்பதியர்களின் வருங்காலத்தை வலுவாக்கும் நிதி யோசனைகள்.. விவரம் உள்ளே..! 

தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி?

ஏழாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடத்திலும், புதுவை-காரைக்கால் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில் ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரை மன்னார்குளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகமாக 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசலாம். இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதி ஆந்திர கடலோரப்பகுதி, அந்தமான் பகுதி, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு, வடக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். அரபிக் கடலை பொறுத்தமட்டில் ஏழாம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் மத்திய மேற்கு அரபிக் கடல், தென்மேற்கு அரபிக் கடல் ஆகிய இடங்களில் பலத்த சூறாவளி காற்று 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.