Teeanager Murder: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!

விருதுநகரில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த வாலிபரை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teeanager Murder: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!
Murder | Affair File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 30, ராஜபாளையம் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வட்டம், துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் மைனர். இவர் சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மாலதி. இவர் துரைச்சாமிபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மாலதிக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. Teenager Was Hacked To Death: முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை; வாலிபர் பலி..!

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு துரைச்சாமிபுரத்தில் உள்ள செங்குட்டுவன் தெருவில் நகராட்சி பொது கழிப்பிடம் (Municipal Public Toilet) உள்ளது. அதன் அருகே சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு சென்ற மைனர், அவரது தம்பி பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர் அழகுராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, மதுபோதையில் இருந்த சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றுள்ளனர். பின், அங்கிருந்து மூவரும் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில், பாண்டியராஜன் மற்றும் அழகுராஜ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மைனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).