Mysterious Object Flying In Sky: இரவு வானில் பறந்த மர்ம பொருள்; சென்னையில் ஏலியன்களின் பறக்கும் தட்டு? வீடியோ வைரல்..!

சென்னையில் நேற்று இரவு வானில் பறந்த மர்ம பொருள் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது.

Mysterious Object Flying In Sky: இரவு வானில் பறந்த மர்ம பொருள்; சென்னையில் ஏலியன்களின் பறக்கும் தட்டு? வீடியோ வைரல்..!
Mysterious Object Flying In Sky (Photo Credit: @chennaiweather X)

ஆகஸ்ட் 20, சென்னை (Chennai News): விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட உலக நாடுகள் பலவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏலியன்ஸ் (Aliens) குறித்தான தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதாக பல வதந்திகள் பரவி வருகிறது. அடிக்கடி வானில் மர்ம பொருள் காணப்படுவதாக, மக்கள் வீடியோ எடுத்து அதனை வெளியிடுகின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த நாடும் அதிகாரபூர்வமாக அறிவித்தது இல்லை. Is Google Listening to You?: கூகுள் நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறதா? ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உடனே இதை ஆப் பண்ணுங்க..!

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 19) இரவு வானில் மர்ம பொருள் ஒன்று வெளிச்சத்தில் மிளிர்ந்தவாறு காட்சியளித்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மக்கள் பலரும் இது வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கக்கூடும் என கூறி வருகின்றனர். அதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).