Smartphone (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 20, சென்னை (Technology News): கூகுள் நாம் என்னென்ன தலைப்பைப் பற்றி தகவல் தேடுகிறோம், கிடைக்கும் தகவல்களில் எதை நாம் க்ளிக் செயகிறோம் என்ற போன்ற விஷயங்களை சேகரிக்கும். ஆனால் அதன் நோக்கம் இணையத்தின் பயன்பாட்டுத் தரத்தை மேம்படுத்துவதும், உங்கள் ஆர்வம் சார்ந்த விளம்பரங்களைக் காட்டுவது மட்டுமே.

விளம்பரம்: உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தேடு சொல்லிற்கு பெரும்பாலானோர் ஐந்தாவது முடிவை சொடுக்குகிறார்கள். அந்த இணையப்பக்கத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் எனில், அந்த இணையப்பக்கம் அந்த குறிப்பிட்ட தேடுசொல்லிற்கு மிகவும் தொடர்புள்ள முடிவு என்று கூகுள் முடிவு செய்யும். இனி அந்த சைட் ஐந்தாவது இடத்திற்கு பதிலாக முதலிடத்தில் காட்டப்படும் (அந்த தேடு சொல்லிற்கு). அடுத்து பயனாளர் நான்கு தளங்களை பார்த்துவிட்டு ஐந்தாவதாக இந்த தளத்திற்கு வரததேவையில்லை. அவருடைய அந்த தேடுசொல்லிற்கான முடிவு முதலாவதாகவே காட்டப்படும். Mobile Service: மொபைலை சர்வீஸுக்கு கொடுக்கும் முன் செய்ய வேண்டியவைகள்.. விபரம் உள்ளே..!

நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட சோப்பு பற்றி இணையத்தில் தேடுனீர்கள் என்றால், நீங்கள் சோப்பு வாங்கப்போவதாக கூகிள் முடிவு செயது, சோப்பு சார்ந்த விளம்பரங்களை காட்டும். இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சி எவ்வளவு நன்மைகளைத் தருகின்றதோ அதேயளவு தீமைகளையும் தருகின்றது. அதில் இணையவழி தகவல்கள் திருடப்படுவது, மோசடிகள், ஒட்டுக்கேட்பது, இப்படி எத்தனையோ நிகழலாம். அதனைப் பயன்படுத்தவோர்தான் பாதுகாப்பு முறைகளை அறிந்து பினபற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்: அதற்கு உங்கள் மொபைலில் (Android) உள்ள செட்டிங்ஸ் டச் செய்து Google செயலியின் உள்ளே செல்ல வேண்டும். அதில் Manage Google Settings டச் செய்தால் DATA AND PRIVACY ஆப்ஷன் இருக்கும். அதில் My Ad Center சென்று Personalized Ads என்பதை ஆஃப் செய்ய வேண்டும். இறுதியாக Delete Advertising Id என்பதை டச் செய்து நீக்கினால் இனி உங்களுக்கு விளம்பரங்கள் வராது.