Husband Stabbed To Wife: கணவனை பிரிந்து தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை..!

கிருஷ்ணகிரியில் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறொருவருடன் தகாத உறவில் இருந்துவந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Stabbed To Wife: கணவனை பிரிந்து தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை..!
Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 26, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை அருகே எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சின்னமுத்து-சீதா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், சீதா போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். Kenya Flood: கென்யாவில் தொடர் கனமழை; வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் பலி..!

இதனையடுத்து, அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவருடன், சீதா தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த சின்னமுத்து, ஆத்திரத்தில் பிரகாஷின் மாந்தோப்பிற்கு தன்னுடைய உறவினர்களை கூட்டி சென்று, சீதாவை தன்னுடன் வாழ வரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு சீதா மறுப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், தகவல் அறிந்து வந்த பிரகாஷ் அங்குள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற சின்னமுத்து, தன்னுடன் வர மறுப்பு தெரிவித்த சீதாவை கத்தியால் குத்திக் கொலை (Murder By Stabbing)செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர், மாந்தோப்பு உரிமையாளர் பிரகாஷ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள சின்னமுத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).