Kenya Flood (Photo Credit: @SESMOLJ X)

ஏப்ரல் 26, நைரோபி (World News): ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கென்யாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக நீர்தேக்க பகுதிகளில் நீரின் அளவு உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வந்து வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வந்தது. இதனையடுத்து, அங்கு கரையோரங்களில் வசித்து வந்த சுமார் 2 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: “இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்” – வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.!

இந்நிலையில், கென்யாவில் நேற்றைய தினம் திடீரென வெள்ளப்பெருக்கு நிகழ்ந்துள்ளது. இதனால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் அதிவேகமாக தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடியது. இதன் விளைவாக குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியது. இதில், மின்கம்பங்கள் மற்றும் பெரிய அளவிலான மரங்கள் ஆகியவை வேரோடு அடித்து செல்லப்பட்டன. மேலும், பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து, அங்கு பேரிடர் மீட்புக் குழு (Disaster Rescue Team) தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், இதுவரை 32 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பேரிடர் மீட்புக் குழு அறிவித்துள்ளது. மேலும், பலரை மீட்க தொடர்ந்து மீட்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.