Woman Dies: நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி.. உறவினர்கள் சோகம்..!

திருப்பத்தூரில் நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Dies: நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி.. உறவினர்கள் சோகம்..!
Paddy harvester heavy machine | Dead Body File Pic (Photo Credit: YouTube | Pixabay)

நவம்பர் 19, திருப்பத்தூர் (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டம், தாதவல்லி பகுதியைச் சேர்ந்த தம்பதி நடராஜ் - சசி (வயது 42). சசி, திருப்பத்தூர் அடுத்த பெரிய வெங்காயபள்ளி பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் (Paddy And Rice Harvester) நெல் பயிர்களை செலுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Gym Owner Dies: உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலார்பேட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).