Gym Owner Dies: உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!
சேலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் உரிமையாளர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 19, சேலம் (Salem News): சேலம் மாவட்டம், கோட்டை பகுதியை சேர்ந்த மகாதீர் முகமது (வயது 35) என்பவர் உடற்பயிற்சி கூடம் (Gym) வைத்துள்ளார். இவர், தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 17) காலை உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்ற நபர்கள் தங்களின் உடற்பயிற்சியை முடிவித்துவிட்டு சென்றுள்ளனர். School Girl Dies: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு.. நடந்தது என்ன..?
இதனையடுத்து, மகாதீர் முகமது தானும் உடற்பயிற்சியை (Exercise) முடித்துவிட்டு, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது ஓட்டுநர் சந்தேகமடைந்தார். உடனே குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகாதீர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அருகிலுள்ள பொதுமக்களின் உதவியுடன் மகாதீரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 19, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

