Accident (Photo Credit: Pixabay)

மே 20, மதுரை (Madurai News): சென்னையில் உள்ள மணலிமாத்தூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனச்செல்வி (வயது 60). இவர்கள் இரண்டு பேரும் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி காரில் சென்றுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27) என்பவர் காரை ஓட்டியுள்ளார். iPhone 16 Series Leaked Photos: ஐபோன் 16 சீரிஸ் புகைப்படம் கசிவு; அதன் நிறம், வடிவமைப்பு குறித்த விவரங்கள் இதோ..!

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அடுத்த தாமரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நான்கு வழி சாலையின் பக்கவாட்டில் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் வேகமாக விழுந்து நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதில், தனச்செல்வி என்பவருக்கு செல்லும் வழியிலேயே உயிர் (Woman Death) பிரிந்தது. படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.