iPhone 16 Series (Photo Credit: @amitbehalll X)

மே 20, சென்னை (Technology News): ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மொபைல்களின் புகைப்படம் தற்போது கசிந்துள்ளது. இது போலி அலகுகள் (Dummy units) ஆகும். இருப்பினும், இதன்மூலம் அதன் நிறம் உட்பட போனின் சாத்தியமான வடிவமைப்பு விவரங்களைப் பெற முடிகிறது. இது கருப்பு நிறத்தில் தோன்றுகிறது.

இதன் புகைப்படத்தை X.com வலைதளத்தில் லீக்கர் மஜின் பு பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், செங்குத்து கேமரா அமைப்புடன் கூடிய ஐபோனை காண முடிகிறது. மூலைவிட்ட கேமரா அமைப்பைக் கொண்ட வழக்கமான சதுர கேமரா இதில் இல்லை. மேலும், இதில் போனின் அளவு மற்றும் இரட்டை கேமராக்கள் ஆகியன வழக்கமான ஐபோன் 16 என்று கூறப்படுகிறது. ஃப்ளாஷ்லைட் கேமராவின் வெளியே அமைந்துள்ளது. அதன் பின்புறத்தில் ஆப்பிள் லோகோவும் இருக்கின்றது. Elakkai Sorbet: கோடை வெயிலுக்கு ஏற்ற ஏலக்காய் சர்பத் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

ஐபோன் 16 சீரிஸ் நிறங்கள்:

புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் Ming-Ci Kuo கூறுகையில், ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவை கருப்பு, வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை போன்ற நிறங்களில் வரலாம். இதனிடையே, ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மாக்ஸ் கருப்பு, வெள்ளை, சாம்பல் மற்றும் ரோஸ் ஆகியவற்றில் வரக்கூடும். இவை கடந்த ஆண்டு ஐபோன் 15 ப்ரோ தொடரின் ப்ளூ டைட்டானியம் நிறத்தை மாற்றி வரக்கூடியதாகும்.

வழக்கமான ஐபோன் 16 சீரிஸில் பிற வதந்தியான அம்சங்களில் ஆக்‌ஷன் பட்டன், வீடியோக்களை விரைவாகப் பதிவு செய்ய கேப்சர் பட்டன், ஃபோகஸ் சரிசெய்தல் போன்றவை மற்றும் இடஞ்சார்ந்த வீடியோ பதிவு ஆகியவை இதில் அடங்கும்.