Young Girl Complaint Against Temple Priest: பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த கோவில் பூசாரி; இளம்பெண் பரபரப்பு புகார்..!

சென்னையில் இளம்பெண் ஒருவர், தன்னை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்ததாக கோவில் பூசாரி மீது காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl Complaint Against Temple Priest: பாலியல் தொழிலில் தள்ள முயற்சித்த கோவில் பூசாரி; இளம்பெண் பரபரப்பு புகார்..!
Rape File pic (Photo Credit: Pixabay)

மே 15, விருகம்பாக்கம் (Chennai News): சென்னை, விருகம்பாக்கம் அடுத்துள்ள சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'நான் என்ஜினியரிங் (Engineering) படித்து முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள அம்மன் கோவிலுக்கு நான் அடிக்கடி சாமி கும்பிட சென்று வருவேன். Church Priest Hanging Suicide: தேவாலய பாதிரியார், அறையில் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன..? காவல்துறையினர் விசாரணை..!

அப்போது, கோவில் பூசாரியாக பணியாற்றி வரும் கார்த்திக் முனுசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவரது சொகுசு காரில் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தீர்த்தம் எனக்கூறி, திரவம் ஒன்றை கலந்து கொடுத்து குடிக்க கொடுத்தார். அதனை குடித்த சற்று நேரத்தில் நான் மயங்கியுள்ளேன். அப்போது, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், அம்மன் கோவிலில் வைத்து அவர் என்னை தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துவிட்டார். மேலும், அவர் தன்னை பாலியல் தொழிலில் தள்ள முயன்றார் எனவும்' அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 15, 2024 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).