![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1715148447Hanging%2520Suicide-380x214.png)
மே 15, வள்ளியூர் (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் புனித பாத்திமா அன்னை தேவாலயம் இருக்கின்றது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் மகன் ஆரோக்கிய தாஸ் (வயது 39) என்பவர் தேவாலயத்தின் பாதிரியாராக (Priest) பணிபுரிந்து வந்துள்ளார். Rural Agriculture Training: கிராமப்புற வேளாண்மை பயிற்சி.. விதை உரக்கட்டு தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்..!
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், நேற்று முன்தினம் திருவிழா முடிவு பெற்றது. இதனையடுத்து, நேற்று ஆலயத்தில் வழக்கம்போல் சிறப்பு பிராத்தனை நடந்தது. இந்நிகழ்வில் பாதிரியார் ஆரோக்கிய தாஸ் பங்கேற்கவில்லை. இதனால், ஆலயத்தின் பின்புறமாக உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வள்ளியூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஆரோக்கிய தாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், இவர் கடந்த ஓராண்டாக ஆலயத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று வேறொரு ஆலயத்திற்கு பணிமாறுதலாகி செல்ல வேண்டியதாக இருந்த சூழ்நிலையில், அதற்கான டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தார். இதற்கிடையில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.