மார்ச் 14, சென்னை (Cinema News): சமீபத்தில் தமிழில் வெளியான ‘செவப்பி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தில் நடித்த பூர்ணிமா ரவி அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும், தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Paytm FASTag Stopped: பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி அறிவிப்பு..!
மேலும் அவர், தனக்கு ஆரம்ப காலத்தில் விரும்பிய கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சவால்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது அதிகமான பட வாய்ப்புகள் தன்னை முதன்மைப்படுத்தி வருவதாகவும் பூர்ணிமா ரவி மகிழ்ச்சியோடு கூறினார். பின்னர், நடிகர் தனுஷை எனக்கு பிடிக்கும் எனவும், மேலும், தனுஷ் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் போவார் எனவும், இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று பூர்ணிமா ரவி தெரிவித்தார்.
மேலும், நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திரிஷா ஆகியோருக்கும் இது போன்ற நடிப்பு திறன் இருக்கிறது என்று கூறினார்.